பூஜா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Thursday,October 20 2022]
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா அதன்பின் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன பூஜா மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பாலிவுட்டிலும் சில படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட விபத்தால் காயமடைந்தார். இதனால் அவரது காலில் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை அடுத்து அவரது சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் இரண்டு வாரம் கழித்து எடுக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை பூஜா தனது காலில் காயம் ஏற்பட்டு உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, விரைவில் நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.