close
Choose your channels

மாலத்தீவு நடுக்கடலில் வலை மெத்தை.. ஹாயாக தூங்கும் பூஜா ஹெக்டே.. வைரல் வீடியோ..!

Friday, October 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாலத்தீவில் உள்ள கடலில் வலை மெத்தையில் ஹாயாக பூஜா ஹெக்டே படுத்து தூங்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை பூஜா தமிழ் தெலுங்கு ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய் நடித்த ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த அவர் ஒரு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு அவர் அங்கு கடலில் உள்ள ஒரு வீட்டில் ஹாயாக தண்ணீர் மேல் விரிக்கப்பட்ட வலை மெத்தையில் படுத்து தூங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பூஜா ஹெக்டே கையில் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் விரைவில் சில படங்களில் அவர் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment