மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே என்பதும், இவர் ஏற்கனவே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிரபலங்களுடன் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தெலுங்கில் உருவாகிவரும் பிரபாஸின் ’ராதேஷ்யாம்’ மற்றும் சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மகேஷ்பாபுவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய 28வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகேஷ்பாபுவின் 28வது படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பூஜாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கும் இந்த படத்தை த்ரிவிக்ரம் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ்பாபு மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘மகரிஷி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SSMB28????????♥️
— thaman S (@MusicThaman) August 9, 2021
Back Again With Our Very Own #SuperStarMaheshBabu gaaru ??@urstrulyMahesh & Our dear director #Trivikram gaaru ✊??❤️@haarikahassine ❤️ @hegdepooja ????#HBDSuperstarMaheshBabu #HBDMaheshBаbu ??????
Enjoy ?????? God bless
https://t.co/BgNocW5yxI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com