பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூஜா ஹெக்டே!

  • IndiaGlitz, [Saturday,April 16 2022]

திரையுலகின் முன்னணி நடிகைகள் தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக ’புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல நடிகைகள் தமன்னா, ரெஜினா, லட்சுமிராய் உள்ளிட்டோரும் ஒரு பாடலுக்கு சில படங்களில் நடனம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் F3. இந்த படத்தில் நாயகிகளாக தமன்னா, மெஹ்ரின் பிர்ஜிதா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அனில்ரவிபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடியதாகவும் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.