close
Choose your channels

நான் இப்போதும் சிங்கிள் தான்.. 57 வயது நடிகருடன் டேட்டிங் குறித்த செய்திக்கு பூஜா ஹெக்டே பதில்..!

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

57 வயதான பிரபல பாலிவுட் நடிகருடன் நடிகை பூஜா ஹெக்டே டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த தகவலை மறுத்த பூஜா ஹெக்டே, தான் எப்போதும் சிங்கிள் தான் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு இந்தி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் சல்மான் கான் நடித்துள்ள 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான் கான் உடன் நடிகை பூஜா ஹெக்டே டேட்டிங்கில் இருப்பதாக பாலிவுட்டில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பதில் அளித்துள்ளார். நான் சல்மான்கானுடன் நடித்த 'கிசி கா பாய் கிசி கா ஜான்'படம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கூடவே எங்களை பற்றிய கிசுகிசுக்களும் பரவி வருகிறது. நான் இப்போதும் சிங்கிள் தான், தனியாகத்தான் இருக்கிறேன், எதிர்காலத்தில் தனியாக இருக்க விரும்புகிறேன். சல்மான் கான் உடன் டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன், ஆனால் இதில் சிறிதும் உண்மை இல்லை’ என்று கூறி வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பூஜா தேஜா மகேஷ் பாபு நடிக்க இருக்கும் 28வது திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment