close
Choose your channels

இன்ஸ்டாவில் 15 மில்லியன்: 4 முக்கிய நபர்களை அறிமுகம் செய்த பூஜா ஹெக்டே!

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே, இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற சாதனையை செய்துள்ளார். இதனை அடுத்து அவர் தனக்கு உதவியாக இருக்கும் நான்கு முக்கிய நபர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அறிமுகம் செய்துள்ளார்.

பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் விதமான தனது டீம் மெம்பர்களை அவர் அறிமுகம் செய்துள்ளார். முதலாவதாக தனது சிகை அலங்காரம் ஸ்டைலிஸ்ட் சாஹாஸ் என்பவரையும், இதனையடுத்து தனக்கு மேக்கப் போடும் கஜோல் என்பவரையும், அடுத்ததாக தனக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் சாந்தி என்பவரையும் இறுதியாக தனது உதவியாளர் ராம் என்பவரையும் அவரை அறிமுகம் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படம் மட்டுமின்றி பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’ சல்மான்கான் நடித்து வரும் ’பஜன்’ ரன்வீர் சிங் நடித்து வரும் ’சர்க்கஸ்’ சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ மற்றும் மோஸ்ட் காஸ்ட்லி பேச்சிலர் ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment