மாலத்தீவில் அன்புக்குரியவரின் ஸ்பெஷல் பிறந்த நாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுற்றுலா சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பூஜா தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் மாலத்தீவில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலத்தீவில் தனது அன்புக்குரிய அம்மாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிய புகைப்படங்கள் பூஜா ஹெக்டே பதிவுசெய்துள்ளார். தனது அம்மாவின் 60வது பிறந்த நாளை மாலத்தீவில் மிகவும் சிறப்பாக, சூரியன் மறையும் நேரத்தில், அழகான விளக்கு வெளிச்சத்தில் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இதைவிட எனது அம்மாவுக்கு மிகச்சிறப்பான பிறந்தநாள் கொண்டாட முடியாது என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பூஜா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்று உள்ளேன்

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ மட்டுமின்றி பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சிரஞ்சிவீயின் ‘ஆச்சார்யா’ ஆகிய திரைப்படங்களிலும் பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.