நலிந்த மக்களுக்காக அறக்கட்டளை… நடிகை பூஜா ஹெக்டேவின் சேவைக்கு குவியும் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் 65 ஆவது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இதற்கு முன்பே தமிழில் இவர் “முகமூடி” படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து “All about Love“ எனும் அறக்கட்டளை துவங்கி இருப்பதாக நடிகை பூஜா தகவல் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட அவர், மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை துவங்கி விட்டேன். ஆனால் இந்த அமைப்பின் மூலம் எந்தவொரு பணியையும் செய்யாமல் அதுகுறித்து பேசவிரும்பவில்லை.
தற்போது கொரோனா நேரத்தில் “All about Love“ அறக்கட்டளை மூலம் பல நூற்றுக்கணக்கான நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை செய்திருக்கிறோம். இதைத்தவிர மருத்துவசதி, ரேஷன் பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறோம். எனவே சேவை மையத்தை குறித்து சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன் என நடிகை பூஜா ஹெக்டோ தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா நேரத்தில் அன்பு இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய உணர்ச்சி மற்றும் சக்தி என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாம் காட்டும் சிறிய அன்பு ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் “அல வைகுந்த புரம்மலு“ எனும் படத்திலும் பிரலப நடிகர் பிரபாஸ்ஸுடன் இணைந்து “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தவிர இந்தியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கும் இவர் சமீபத்தில் சல்மான் கான், ரன்வீர் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நலிந்த மக்களுக்காக சேவை மையம் துவங்கி இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments