இது உண்மையிலேயே ரொம்ப மோசம்: ஆத்திரமடைந்து டுவிட் போட்ட பூஜா ஹெக்டே!

  • IndiaGlitz, [Thursday,June 09 2022]

இது உண்மையிலேயே ரொம்ப மோசம் என நடிகை பூஜா ஹெக்டே மிகவும் ஆத்திரத்துடன் தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது மூன்று பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸானால் அவருடைய மார்க்கெட் இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடிகை பூஜா ஹெக்டே தனக்கு விமான பயணத்தில் நேர்ந்த ஒரு வருத்தமான சம்பவத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து புறப்படும் விமானத்தில் நாங்கள் பயணம் செய்தபோது அந்த விமானத்தின் ஊழியர் தங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

விபுல் நகாஷே என்ற அந்த ஊழியர் எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என்றும் அவர் முற்றிலும் திமிர் பிடித்தவராக இருந்தார் என்றும் கூறினார். முழுக்க முழுக்க அச்சுறுத்தும் தொனியில் அவருடைய பேச்சு இருந்தது என்றும் எந்தவித காரணமும் இல்லாமல் எங்களிடம் கோபப்பட்டார் என்றும் தெரிவித்த பூஜா, பொதுவாக இதுபோன்ற பிரச்சனைகளை நான் பொதுவெளியில் பகிர்வது இல்லை என்றும் ஆனால் இது உண்மையிலேயே மிகவும் மோசமான மோசமாக இருந்ததால் தான் பதிவு செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் விமான நிறுவன ஊழியர் குறித்து நடிகை பூஜா ஹெக்டே பதிவு செய்துள்ள இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.