close
Choose your channels

மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் பூஜா ஹெக்டே: அவரே கூறிய தகவல்!

Saturday, August 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’முகமூடி’ என்ற திரைப்படத்தில் நடிகை பூஜாவுக்கு அறிமுகமானாலும் அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியானார். இந்த நிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பிஸியான நடிகையாகவும் அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக பூஜா ஹெக்டே ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கம் ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பூஜா ஹெக்டே ’நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அது மட்டுமின்றி மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதில் தான் பெருமை படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பூஜா ஹெக்டே மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் நடிக்கும் அடுத்த தமிழ் படம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே கலந்து கொண்டு உள்ளார் என்பதும் இன்னும் ஒரு சில நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ பிரபாஸ் நடத்திவரும் ’ராதேஷ் யாம்’ மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே இந்திய அளவில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment