கொரோனா விடுமுறையில் வீட்டில் அல்வா கிண்டிய பிரபல நடிகை

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் நடிகைகள் அனைவரும் தற்போது நாட்கணக்கில் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டு வேலைகள் உள்பட ஒரு சில வேலைகளை செய்து அதனை புகைப்படமாகவும் வீடியோவாகவும் தங்களது சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழில் ’முகமூடி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன் பின் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது சமூக வலைத்தளத்தில் அல்வா கிண்டுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தானே அல்வா கிண்டி அதை சாப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூஜா ஹெக்டே அல்வா கிண்டும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் நாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே தான் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே திருடிய மனைவி கைது!

கணவருக்கு தூக்க மருந்து கலந்த கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகை திருடிய மனைவியால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில் நேற்று இருவர் பலியானதால் அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல பாடகி!

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பி வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 4வது பலி

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு எவ்வளவு? 

கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு முழு சிகிச்சை செலவு இலவசம் என்பது தெரிந்ததே.