சசியின் 'பூ' படத்தில் நடித்த நாடக நடிகருக்கு மாரடைப்பு: தமிழ் நடிகர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் சசி இயக்கிய ‘பூ’ என்ற திரைப்படத்தில் நடித்த வீதி நாடக கலைஞர் மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பூ’ . இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துக்கு தந்தையாக ராமு என்ற வீதி நாடகக் கலைஞர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் அதன் பிறகு அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘வீதி நாடகக் கலைஞர் ராமுவுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ் நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
விரைந்து நலம் பெற்றுவா தோழா!
வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைந்து நலம் பெற்றுவா தோழா!
— Kaali Venkat (@kaaliactor) June 27, 2022
வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார். pic.twitter.com/4Y31KiyvZt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments