close
Choose your channels

'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'.. சிவகார்த்திகேயனுக்கு பதில் இந்த இளம் நடிகரா?

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹிட் படமான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், டி இமான் இசையில், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உட்பட பலர் நடிப்பில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் முதல் சூப்பர் ஹிட் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் பொன்ராம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக கவின் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரொமான்ஸ் மற்றும் ஜாலியான கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் முதல் பாகத்தில் நடித்த சத்யராஜ் உட்பட சில நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் ஏற்கனவே வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்திலும் நடிக்க உள்ளதை எடுத்து அவருக்கு அடுத்தடுத்து வெற்றி படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment