சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ மற்றும் ’சீமராஜா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம். இவர் இயக்கி முடித்துள்ள மற்றொரு திரைப்படம் ’எம்ஜிஆர் மகன்’
இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்து விட்டதை அடுத்து கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் சென்சார் ஆகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது குறித்த தகவல் வந்துள்ளது
‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்து உள்ளதாக இயக்குனர் பொன்ராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சசிகுமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடகர் அந்தோணி தாசன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
ITS OFFICIAL: #MGRMAGAN CENSORED WITH ‘U’ CERTIFICATE.@Screensceneoffl @SasikumarDir #Sathyaraj Sir @thondankani #saranya mam @mirnaliniravi @vinothrsamy @AnthonyInParty @g_durairaj @vivekharshan @sidd_rao @senthilkumarsmc @onlynikil pic.twitter.com/Lqn8UsMCMg
— ponram (@ponramVVS) August 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments