முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும், முதலமைச்சராக ஒரு துடிப்புள்ள இளைஞரை தேர்வு செய்வேன் என்றும் கூறியிருந்தார். மேலும் தான் கட்சியின் தலைவராக மட்டும் இருந்து வழிகாட்ட போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்து குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்

இந்த நிலையில் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் அவர்கள் பேசியதாவது: மாற்றத்திற்காக வந்தவர்கள் மாற்றத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் எல்லோரும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்ற ஒரே கொள்கையில் இருக்கின்றனர். அந்த ஒரே கொள்கையை வைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில் முதலமைச்சரை உருவாக்க நான் இருக்கிறேன் என்று சொல்கிறார் என்றால் அவர்தான் தலைவர்.

முதலமைச்சர் பதவிக்கு பலர் தற்போது சண்டை போட்டு வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளராக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஒரு பக்கம் உள்ளனர். இன்னொரு பக்கம் முக ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் உள்ளனர். அதுபோக முதலமைச்சர் வேட்பாளராக சீமான், கமலஹாசன், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் உள்பட ஒருசிலர் இருக்கின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை நம்பி வரக்கூடிய ஒரு இளைஞனை, ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவரை, மக்களால் மதிக்கப்படும் ஒரு சிந்தனை உள்ளவனை நான் அனுப்புகிறேன். அவரோடு முடிந்தால் நீங்கள் மோதி ஜெயித்து பாருங்கள் என்று ரஜினி சவால் விடுகிறார். இப்படி சொல்லக்கூடிய துணிவு யாருக்கு உண்டு? என்று பொன்ராஜ் அவர்கள் பேசினார் அவருடைய இந்த பேச்சின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில்

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன 

த்ரிஷாவுக்கு பதில் யார்? சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' நாயகி குறித்த தகவல்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிவரும் 'ஆச்சாரியா' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா திடீரென அந்த படத்திலிருந்து விலகினார்

பிரபுதேவா, சஞ்சிதா ஷெட்டி இணைந்து சந்தித்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் என்பவரை