ராதிகாவின் கேள்விகளுக்கு பொன்வண்ணன் பரபரப்பு பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரு அணியினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியும், கேள்வி கேட்டும் பதில் கூறியும் வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத்குமார் அணியின் சார்பில் ராதிகா கேட்ட ஒருசில கேள்விகளுக்கு பாண்டவர் அணியில் உள்ள இயக்குனர் பொன்வண்ணன் பதிலளித்துள்ளார்.
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்சனையை தீர்க்க பல மணி நேரமும், 'உத்தம வில்லன்' பிரச்சனையை தீர்க்க 36 மணி நேரமும் உட்கார்ந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் சரத்குமார். இருந்தும் கமல் ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. கமல் ஒரு மிகப்பெரிய நடிகர். அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் நடிகர்கள் அனைவருமே ரஜினியையும், கமலையும் அண்ணாந்து பார்த்து கெளரவப்படுத்தி வரும் நிலையில், நடிகர் சங்கத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பமான நிலையில் இருவரும் ஏன் இந்த பிரச்சனையை தீர்க்க முன்வரவில்லை என வருத்தத்துடன் நடிகை ராதிகா கேள்வி எழுப்பியிருந்தார்.
ராதிகாவின் இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள இயக்குனர் பொன்வண்ணன், 'ரஜினி, கமல் ஆகிய இருவரும் வாக்களிக்கக்கூடிய ஒரு உறுப்பினராக, இந்த தேர்தலில் முதல் வாக்காளராக தங்களை பதிவு செய்தால், இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்பதை மட்டுமே நாங்கள் பார்க்கின்றோம். தேர்தலுக்கு பின்னர், பொறுப்புக்கு வந்த பின்னர் இருவரையும் மேடையில் வைத்து கொண்டாட வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது' என்று கூறியுள்ளார்.
அதேபோல், 'அரசியல் கட்சி மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிட்டு அதில் ரூ.30 லட்சம் வருமானம் ஏற்படுத்த வழி வகைசெய்வோம் என்று கூறியுள்ளார்களே தவிர எப்படி அந்த 30 லட்ச ரூபாய் வரும் என்பது குறித்த எவ்வித விளக்கமும் இல்லை' என்று ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள பொன்வண்ணன், "நாங்கள் முதன்முதலில் நடிகர் சங்க தேர்தலை சந்திக்கின்றோம். எங்களுக்கு என்று ஒரு கனவு உள்ளது. சங்கத்திற்கு என்ன செய்யபோகிறோம் என்று சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அந்த கடமையை ஆத்மார்த்தமாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இதற்கு அரசியல் என்றோ, காமெடி என்றோ அல்லது வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் அவர்கள் வைத்துக்கொள்ளட்டும்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com