உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? விஜய்க்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என நடிகர் விஜய்க்கு பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தளபதி விஜய்யின் சார்பில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் மற்றும் பதிவுகள் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை விமர்சித்துள்ள பால் முகவர் சங்க நிர்வாகி பொன்னுசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ, திரைப்பட காட்சிகள் குறித்தோ, கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..?
அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா விஜய்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொதுவெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள @actorvijay அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில் தனக்கோ திரைப்பட காட்சிகள் குறித்தோ 1/3 #TNMilkAssociation
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) April 7, 2022
தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..? அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்றால் அது தக்காளி சட்னியா சிந்திப்பாரா..? @actorvijay 3/3 #TNMilkAssociation #BeastUpdate
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) April 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com