'பொன்னியின் செல்வன்' 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? 

  • IndiaGlitz, [Monday,October 03 2022]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

ஏராளமான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது மட்டுமின்றி பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவருமே கிட்டத்தட்ட இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு குவிந்து வருவதால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விடுமுறைகள் தொடங்குவதால் இந்த படம் இதுவரை தமிழ் சினிமா செய்யாத வசூல் சாதனையை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று கூறப்பட்ட நிலையில் முதல்பாகமே 500 கோடியை வசூலித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொன்னியின் செல்வன் 3 நாட்கள் மொத்த வசூல்:

தமிழ்நாடு: 77.35 - 78.35 கோடி

இந்தியா முழுவதும்: 121.5 - 123.5 கோடி

வெளிநாட்டு வசூல்: 87.5 - 92.5 கோடி

உலகம் முழுவதும் : 209 -216 கோடி