'பொன்னியின் செல்வன்': 10 முக்கிய கேரக்டர்களும், அதில் நடித்த நட்சத்திரங்களும்..
Send us your feedback to audioarticles@vaarta.com
அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கி உள்ள நிலையில் முதல் பாகம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் என்றாலே அமரர் கல்கியின் பாத்திரப் படைப்புதான் அனைவருக்கும் ஞாபகம் வரும் என்பதும் கல்கியின் பாத்திரப்படைப்புகள் தான் அந்த நாவலின் மிக முக்கிய அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது., அந்த வகையில் அவர் படைத்த 10 முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. ஆதித்த கரிகாலன்: பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் முக்கியமான கேரக்டரான ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். காதல் தோல்வி, அவமானம் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்த கேரக்டருக்கு உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
2. வல்லவரையன் வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் நாவலின் ஹீரோ இவர்தான் என்பதும் ராஜராஜசோழனின் நன்மதிப்பை பெற்று அவருடைய சகோதரி குந்தவையை காதலித்து சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக நடக்கும் சதிகளை முறியடிக்கும் ஒரு வீரமான கேரக்டர். வீரம், காதல் மற்றும் நகைச்சுவை ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இந்த கேரக்டரில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.
3. ராஜராஜசோழன்: பொன்னியின் செல்வன் என்ற டைட்டில் கேரக்டரான இந்த கேரக்டர் கம்பீரமானது என்பதும் வீரம் நிறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜராஜசோழன் என்றாலே சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிபிடத்தக்கது. இந்த கேரக்டரில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ளார்.
4. குந்தவை: அரசியலை ஆழமாக அறிந்த இளவரசி குந்தவை, ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசகராக இருந்தவர் என்பதும் அதே நேரத்தில் வந்தியத் தேவனுடன் காதல் கொண்டவர், நந்தினியின் சதியை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவர் என அழகும் அறிவும் கொண்ட ஒரு கேரக்டர். இந்த கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
5. நந்தினி மற்றும் மந்தாகினி: சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் ஒரு சதி நிறைந்த கேரக்டர். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து, சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை, அருள்மொழிவர்மன் மற்றும்ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக சதி செய்யும் கேரக்டர். இந்த கேரக்டர்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
6. ஆழ்வார்க்கடியான்: நகைச்சுவை மற்றும் அரசியலில் ஆழ்ந்த அறிவு கொண்ட இந்த கேரக்டர் பெரும்பாலும் வந்தியதேவன் உடன் பயணிக்கும் என்பதும் வந்தியத்தேவனுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு இந்த கேரக்டர் புத்திசாலித்தனத்துடன் படைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார்.
7. பெரிய பழுவேட்டரையர்: பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் சோழ நாட்டின் அதிகாரியாக இருந்தவர். . வயது முதிர்ந்த காலத்தில் நந்தினியை திருமணம் செய்து கொண்டு அவரை இளையராணியாக்கினார். பொன்னியின் செல்வனில் மிகுந்த செல்வாக்கு கொண்ட கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.
8. சின்ன பழுவேட்டரையர்: சின்ன பழுவேட்டரையர் எனப்படும் கேரக்டர் தஞ்சாவூர் கோட்டையின் தளபதியாக இருந்தவர் என்பதும் தஞ்சை அரண்மனையின் பொக்கிஷம் இவரை அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார்.
9. சுந்தர சோழர்: முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வரான சுந்தர சோழர், சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர். சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டதால் பெருந்துயருற்ற இவர் நோயுற்று காலமானார்.
10. பூங்குழலி: சேந்தன் அமுதன் காதலியாக வரும் பூங்குழலி கேரக்டர் பூவைப் போன்றவர், காண்போர் மயங்கும் அழகிய பெண்ணாக இருந்தாலும், பெரும் புயலிலும் தனித்து ஆழ்கடலில் படகோட்டும் திறனுடையவர். இந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments