close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' டீசர் ரிலீஸ் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்?

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் அமரர் கல்கி எழுதிய நாவலான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் ராஜராஜ சோழனின் பெருமையை குறிக்கும் வகையிலான படம் என்பதால் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை சோழர்களின் தலைநகராக இருந்த தஞ்சையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சையில் நடத்த திட்டமிட்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீட்டு விழா தற்போது வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு ஜூலை 7ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜூலை இறுதியில் டீசரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் டீசர் ரிலீஸ் ஆகும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment