'தக்ஃலைப்' படத்தில் இணைந்து வரும் 'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்கள்.. இன்னும் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படமான ’தக்ஃலைப்’ படத்திலும் இணைந்து வருகின்றனர்
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு டைட்டிலில் குரல் கொடுத்த கமல்ஹாசன் ஹீரோவாக ’தக்ஃலைப்’ படத்தில் நடிக்கும் நிலையில் ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த 4 நட்சத்திரங்கள் தற்போது இணைந்துள்ள நிலையில் இன்னும் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை பார்க்கும்போது, ’பொன்னியின் செல்வன்’ போல் இதுவும் ஒரு பிரமாண்டமான சூப்பர் ஹிட் படமாக உருவாகும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
With utmost joy, we welcome the elegant @AishuL_ to the ensemble of #ThugLife#Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @C_I_N_E_M_A_A @Gautham_Karthik @abhiramiact #Nasser@MShenbagamoort3… pic.twitter.com/pEBGDEL7Qb
— Raaj Kamal Films International (@RKFI) January 11, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments