close
Choose your channels

'PS 2' சிவோஹம் பாடலை பாடியது இத்தனை பாடகர்களா?

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திப் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற சிவோஹம் என்ற பாடல் வெளியாகி உள்ளது.



இந்த பாடலை சத்திய பிரகாஷ், டாக்டர் நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீநிவாஸ், செண்பகராஜ் மற்றும் ஐயப்பன் ஆகிய ஏழு பாடகர் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இயற்றிய இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது மனதை கொள்ளை கொள்ளும் அளவில் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment