இன்று முதல் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்': இரு முக்கிய நடிகர்கள் தாய்லாந்து விரைவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தாய்லாந்து இன்று முதல் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும், இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய இரண்டு நாயகர்களும் தாய்லாந்து சென்று இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்தி வந்தியதேவன் கேரக்டரிலும் ஜெயம் ரவி ராஜராஜசோழன் கேரக்டரிலும் நடித்து வருகிறார்கள் என்பதும் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களுக்கு படமாக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விரைவில் விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் விரைவில் தாய்லாந்து செல்ல இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்கள் தாய்லாந்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com