'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்ஸ்பாட்: விக்ரமின் அட்டகாசமான புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நடிகை த்ரிஷா சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்து வரும் விக்ரம் மற்றும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோரின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அஹில்யா என்ற கோட்டையில் தற்போது விக்ரம், கார்த்தி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.