பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்து இங்கு தான்....! பிரகாஷ்ராஜ் ட்வீட்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
PS-1 படம் துவங்கியது....!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி , குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், சுந்தரசோழனாக பிரகாஷ் ராஜ், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அதிகளவு பொருட்செலவிலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி அவர்களின் நாவலை தழுவியே இப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை இயக்குவதையே இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து குமாரவேல் திரைக்கதைக்கு பெருமளவில் உதவியுள்ளார். மாபெரும் பட்ஜெட் திரைப்படம் என்பதால், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
அண்மையில் தான் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவு செய்த படக்குழு, முதல் பாகத்தை வரும் 2022-ல் வெளியிட உள்ளது. இது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு திரைவிருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மத்தியப்பிரதேசத்தில் ஷூட்டிங்....!
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் தாய்லாந்து, புதுச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. 80% பணிகள் படத்தில் நிறைவடைந்த நிலையில், படக்குழு அடுத்தடுத்த காட்சிகளை எடுப்பதற்காக மத்திய பிரதேச மாநிலம், ஓர்ச்சாவுக்கு சென்றுள்ளனர். "அரண்மனை நகரம்" என்று அழைக்கக்கூடிய ஓர்ச்சா அம்மாநிலத்தின் மிகப்பழமையான நகரமாகும். இந்த நகரத்தை கோவில்களும், அரண்மனைகளும் தான் தங்களுடைய அழகால் ஆட்சி புரிந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து தகவலை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி, மணிரத்னம் மற்றும் பிரகாஷ் ராஜ் அந்த புகைப்படத்தில் உள்ளனர்.
BACK to work .. landed in Gwalior with #Maniratnam sir @Karthi_Offl on our way to Orchha for #PonniyinSelvan .. pic.twitter.com/0RjfonSc4l
— Prakash Raj (@prakashraaj) August 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com