'பொன்னியின் செல்வன்' வெற்றி எதிரொலி: அடுத்தடுத்து வெளியாகும் சமுத்திரகுமாரியின் 2 படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,October 09 2022]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.400 கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதால் இதுவரை இல்லாத அளவில் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய வசூலை இந்த படம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்பதும் அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சமுத்திரகுமாரி பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவர் நடித்த இரண்டு படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய அந்தந்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து ’அம்மு’ என்ற வெப்சீரிஸ் வரும் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல் மலையாள நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ’குமரி’ என்ற மலையாள படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான

'வெந்து தணிந்தது காடு' நாயகியின் அடுத்த படம்: ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

 சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்': படக்குழுவினர் வெளியிட்ட 2 நிமிட செம வீடியோ!

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. 

'தளபதி 67' கெட்டப் இதுதானா? வேற லெவலில் விஜய்யின் மாஸ் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் செய்திகளை விட 'தளபதி 67' படத்தின் செய்திகள்தான் அதிகம் வெளிவந்து

இன்று 'பிரின்ஸ்' டிரைலர், இதே நாளில் தான் அந்த சம்பவம் நடந்தது: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதே நாளில்தான் தன்னுடைய 'டாக்டர்' என்ற வெற்றி படம் வெளியானது என்று நடிகர் சிவகார்த்திகேயன்