close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' ரன்னிங் டைம் இவ்வளவா? வெளிநாட்டு சென்சாரில் தகவல்

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உரிமையுள்ள உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்னும் இந்த படம் சென்சார் செய்யப் படவில்லை என்றாலும் ஒரு சில வெளிநாடுகளில் இந்த படம் சென்சார் செய்து ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் என்றும் மொத்தம் இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 46 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட உடன் தான் இறுதி ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos