நேற்று லாஸ் வேகாஸ், இன்று ஹாலிவுட்: உலக அளவில் புரமோஷன் செய்யும் பொன்னியின் செல்வன்' டீம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் உலக அளவில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் முழுவதும் புரமோஷன் செய்த படக்குழுவினர் உலக அளவிலும் டிஜிட்டல் முறையில் புரமோசன் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று லாஸ் வேகாஸில் உள்ள ஒரு பிரம்மாண்டமான திரையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிரைலர் நேற்று திரையிடப்பட்டது. இந்நகரில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படத்தின் டிரைலர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ஹாலிவுட் மலைப்பகுதியில் பொன்னியின் செல்வன் பேனருடன் விமானம் இன்று வட்டமிட்டு உள்ளது. இதனை அடுத்து உலக அளவில் புரமோஷன் செய்யும் பணிகளில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதால் தான் இந்த படத்தின் புரமோஷனுக்காக பல கோடிகளை லைகா நிறுவனம் செலவு செய்துள்ளது என்பதும், அதன் பயனாக இன்று முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் முதல் நாளில் உள்ள அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் முதல் நாளுக்கான காட்சியின் அனைத்து டிக்கெட்டுக்களும் முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
The Glory of The Great Cholas has Reached??HOLLYWOOD, USA ✨#PonniyinSelvan1 ??️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @Tentkotta @sarigamacinemas pic.twitter.com/MsL1aVjAgX
— Lyca Productions (@LycaProductions) September 25, 2022
The Glory of The Great Cholas has Reached??HOLLYWOOD, USA ✨#PonniyinSelvan1 ??️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @Tentkotta @sarigamacinemas pic.twitter.com/MsL1aVjAgX
— Lyca Productions (@LycaProductions) September 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments