பொன்னியின் செல்வன்: விக்ரம் பிரபு, பிரபு, லால் கேரக்டர்களின் அட்டகாசமான போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபு, பிரபு தேவா மற்றும் லால் ஆகியவர்களின் கேரக்டர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கேரக்டர்கள் குறித்த போஸ்டர்களை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சமீபத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் பார்த்திபன், பூங்குழலி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், செம்பியன்மாதேவி கேரக்டரில் ஜெயசித்ரா, மதுராந்தகர் கேரக்டரில் ரகுமான் ஆகியோர் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கேரக்டரில் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் கேரக்டரில் பிரபு மற்றும் மலையமான் கேரக்டரில் லால் ஆகியோர் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Brave. Fierce. Loyal.
— Lyca Productions (@LycaProductions) September 4, 2022
Friends in need, protectors indeed.
Meet @iamvikramprabhu as Parthibendran Pallavan, Prabhu as Periya Velaar and @LalDirector as Malayaman!#PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/O8hDFhU7WN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments