பொன்னியின் செல்வன்: விக்ரம் பிரபு, பிரபு, லால் கேரக்டர்களின் அட்டகாசமான போஸ்டர்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபு, பிரபு தேவா மற்றும் லால் ஆகியவர்களின் கேரக்டர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கேரக்டர்கள் குறித்த போஸ்டர்களை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் பார்த்திபன், பூங்குழலி வேடத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், செம்பியன்மாதேவி கேரக்டரில் ஜெயசித்ரா, மதுராந்தகர் கேரக்டரில் ரகுமான் ஆகியோர் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கேரக்டரில் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் கேரக்டரில் பிரபு மற்றும் மலையமான் கேரக்டரில் லால் ஆகியோர் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

என்னால் இந்த படத்தில் ஒன்றிப்போக முடிகிறது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திர நகர்கிறது' என்ற படத்தை பார்த்தபின் தெரிவித்துள்ளார். 

அமீருடன் திருமணமா? வெற்றி கோப்பைக்கு பின் புரபோஸ் செய்த பாவனி ரெட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அமீரை திருமணம்

நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்: மறைந்த கலைஞரை வணங்கிய புகழ்-பென்சியா தம்பதி!

நீங்கள்தான் எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும் என விஜய் டிவி மறைந்த கலைஞரின் புகைப்படம் முன் புகழ்-பென்சியா தம்பதிகள் வணங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் ரஜினி-கமல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இருவரும் சில திரைப்பட நிகழ்ச்சிகள்

தனுஷின் 'நானே வருவேன்': செம அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'நானே வருவேன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது