'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஜூலை 31ல் செம ட்ரீட்: மாஸ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மாஸ் அறிவிப்பை லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாடல் வந்தியத்தேவனின் அறிமுக பாடலாக இருக்கும் என்பது இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் இருந்து தெரியவருகிறது. ஏஆர் ரகுமானின் இசையில் உருவாகிய இந்த பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளன இந்த படம் இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் படம் ஆகும்.
Let's begin our musical journey into the world of Cholas!#PS1FirstSingle coming your way on 31st July at 6pm! #ManiRatnam #ARRahman#PS1 #PonniyinSelvan @LycaProductions @arrahman @tipsofficial @TipsRegional @ilangokrishnan pic.twitter.com/N9afHFC63D
— Madras Talkies (@MadrasTalkies_) July 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com