'பொன்னியின் செல்வன்' அப்டேட்: 'குந்தவை' த்ரிஷாவின் அட்டகாசமான போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன என்பதை பார்த்தோம்
குறிப்பாக ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம், ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தி, நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய் ஆகிய நான்கு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் தற்போது குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் போது குந்தவையை எவ்வாறு மனதில் கற்பனை செய்து வைத்துக்கொண்டு இருந்தோமோ, அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது ஒரு மொழி
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
In a world of men, a woman of courage. Presenting Princess Kundavai! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! ??️@MadrasTalkies_ #ManiRatnam @arrahman pic.twitter.com/eoJOkSkegl
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com