'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட்சிங்கிள் பாடல்: பாடகர், பாடலாசிரியர் பெயர்கள் இதோ!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் ’பொன்னி நதி’ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை பாடியவர் மற்றும் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் குறித்த தகவலை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

நாளை வெளியாக இருக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ’பொன்னி நதி’ என்ற பாடலை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை கம்போஸ் செய்த இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் குரலில் நாளை வெளியாக இருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.