'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் டிரைலர் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பதும், இந்த படம் இந்திய திரையுலகில் வசூல் சாதனையை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான சில தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ’பொன்னியின் செல்வன்’ முதல் மற்றும் இரண்டாவது பாகம் ஆகியவற்றின் டிஜிட்டல் உரிமை ரூபாய் 125 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் உரிமையை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்திய திரையுலகில் இது மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout