'பொன்னியின் செல்வன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார் என்பதும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் புரமோஷன் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தேவராளன் ஆட்டம்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஆர். ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பதும், யோகி சேகர் இந்த பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.