ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த PS1: ரஜினி, கமல் பட சாதனைகள் முறியடிப்பா?

  • IndiaGlitz, [Friday,October 07 2022]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பிரமாண்டமாக தயாரித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளே இந்த படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்து, இரண்டாவது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் நான்காவது நாளில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ தற்போது 7வது நாளில் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

அமெரிக்காவில் இதுவரை வெளியான தமிழ் திரைப் படங்களில் அதிக வசூல் செய்த படம் ரஜினியின் ’2.0’ என்ற நிலையில் அந்த வசூலை ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினியின் ’2.0’ வசூல் சாதனையை ’பொன்னியின் செல்வன்’ முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படம் கமல்ஹாசன் ’விக்ரம்’ என்பதும் அந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ வசூல் இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.400 கோடி மட்டுமல்ல ரூ.500 கோடி வசூல் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக ட்ரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் மட்டும் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்யாத ரூ.170 கோடி ரூபாய் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் செய்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.124 கோடி வசூல் செய்துள்ளதாகவும் எனவே ’விக்ரம்’ சாதனையை ’பொன்னியின் செல்வன்’ இன்னும் ஓரிரு நாட்களில் முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டுமே முடியும் என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.