ரஜினியின் '2.0' லைஃப்டைம் வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிட்டதா? ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் லைஃப்டைம் வசூலை பத்தே நாட்களில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்’ முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அமெரிக்காவில் 5.5 மில்லியன் டாலர் வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்’ இந்த வசூலை பத்தே நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அமெரிக்காவில் அதிக வசூல் பெற்ற வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமை ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ விரைவில் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.