close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' நந்தினி ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபலமா?

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்க்கக்கூடிய இந்த படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடித்திருக்கிறார் என்பதும் அவரது கேரக்டர் டிரைலரில் சூப்பராக இருந்ததை அடுத்து அவரது நடிப்பை வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கேரக்டருக்கு பிரபல டப்பிங் கலைஞர் மற்றும் சீரியல் நடிகை தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து நான் சந்தோசம் மற்றும் பெருமை கொள்கிறேன். முதன்முறையாக ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பளித்த மணிரத்னம் அவர்களுக்கு எனது நன்றி’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos