சூரிக்கு ஜோடியாகும் 'பொன்னியின் செல்வன்' நடிகை.. டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,December 16 2024]

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக, ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சூரி, தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், அவர் ஹீரோவாக நடித்த ’விடுதலை’ ’கருடன்’ ’கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றது என்பது தெரிந்தது. மேலும், வரும் 20ஆம் தேதி ’விடுதலை 2’ ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது சூரி இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’விலங்கு’ என்ற வெப் தொடர் இயக்கியதின் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சூரி நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார் என்பதும், இவர் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லார்ஜ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ’மாமன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'சூர்யா 45' படத்தில் இணைந்த 3வது நாயகி.. ஆர்ஜே பாலாஜியின் திட்டம் தான் என்ன?

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சமந்தாவை அடுத்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா நயன்தாரா? எந்த ஹீரோ படத்தில்?

'புஷ்பா' திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், ஏற்கனவே பல ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

அரசு சொத்தை விலைக்கு கேட்டானா? இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம்..!

புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த செய்தி குறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக

தளபதி 69.. புத்தாண்டு தினத்தில் டபுள் விருந்து.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்..!

புத்தாண்டு தினத்தில் 'தளபதி 69' படத்தின் இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஜெயம் ரவி மூவருக்கும் சம்பளம் இல்லை.. அப்படி இருந்தும் 'எஸ்கே 25' பட்ஜெட் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 25வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சுதா கொங்காரா ஆகிய மூவரும் சம்பளம் பெறாமல்,