ஹாலிவுட் வாய்ப்பை பெற்ற 'பொன்னியின் செல்வன்' நடிகை.. அதுவும் யுனிவர்சல் பிக்சர்ஸ் படத்தில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை, ஹாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் அவர் நடித்த ஹாலிவுட் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை என்ற கேரக்டரின் தோழி வானதி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களில் நடித்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘தி நைட் மேனேஜர்’ என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரில் நடித்தார் என்பதும் அனில் கபூருடன் இணைந்து இவர் செம ஹாட்டாக நடித்தது பரபரப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் ’சித்தாரா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வரும் நிலையில் ’மங்கி மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சோபிதா துலிபாலா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக அவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments