close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் செல்பி புகைப்படம்: இணையத்தில் வைரல்

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜெயம் ரவி தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமீபத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்ய அதற்கு கார்த்தி பதில் டுவிட் செய்தது வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் விக்ரம், அதே படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் பாபு ஆண்டனி உடன் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பாபு ஆண்டனி கடந்த 80 மற்றும் 90களில் பிரபலமான வில்லன் நடிகர் என்பதும் சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ படத்தில் கூட ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரமுடன் எடுத்த செல்பி புகைப்படம் குறித்து நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் அவர்களை மீண்டும் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டேன் என்றும் அவர் தனது அறைக்கு வந்து இருந்தார் என்றும் இருவரும் நீண்ட நேரம் தங்களது உணர்வுகளை பரிமாறிக் கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment