'இந்து' பிரச்சனையால் இன்னும் ஒரு 100 கோடி கிடைக்கலாம்: ரூ.400 கோடி வசூல் குறித்து  PS1 நடிகர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஏற்கனவே ரூ400 கோடி வசூலை தாண்டிவிட்ட நிலையில் இந்து என்ற பிரச்சனை எழுப்பப்பட்டால் இன்னும் 100 கோடி வசூல் செய்யும் என அந்த படத்தில் நடித்த நடிகர் கிண்டலுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் ரூபாய் 400 கோடி என அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழுவினர் தெரிவித்த நிலையில் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்த பார்த்திபன் இன்னும் ஒரு நூறு கோடி இந்த படம் வசூல் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என பதிவிட்டுள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான பின்னரே ராஜராஜசோழன் இந்து மன்னன் என்று கூறி அரசியலாக்க வேண்டாம் என்று வெற்றிமாறன் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் கூறி வருகின்றனர் என்பதும் அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருவதால் இந்த படத்திற்கு அது இலவச புரமோஷன் ஆகி உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.