முதல் பாகத்தை விட பிரமாண்டம்.. ஐஸ்வர்யா ராயின் இன்னொரு அவதாரம்.. 'PS 2' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தையே பிரம்மாண்டம் என்று விமர்சனம் செய்த ஊடகங்கள் இந்த படத்தை இரு மடங்கு பிரம்மாண்டம் என்று தான் விமர்சனம் செய்யும் என்ற அளவுக்கு இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் தெரிகின்றன.

முதல் பாகத்தில் அருள்மொழிவர்மன் கடலில் மூழ்கி இறப்பது போன்ற காட்சியுடன் முடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதனால் சோழராஜ்யத்திற்கு ஏற்படும் குழப்பம், சோழ ராஜ்ஜியத்திற்கு அடுத்ததாக முடி சூட்டுபவர் யார் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் காட்சிகள் முதல் சில நிமிடங்கள் உள்ளன.

சோழர் ராஜ்யத்தை இரண்டாக பிரித்து மதுராந்தகம் மற்றும் கரிகால் சோழன் ஆகிய இருவருக்கும் வழங்க வேண்டும் என்ற பழுவேட்டையர் யோசனை கூறுகிறார். ஆனால் குந்தவை அந்த யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த நிலையில் தான் அருள்மொழிவர்மன் உயிரோடு இருப்பது தெரிய வர அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் கரிகாலனை கொல்ல வேண்டும் என்று பழிவாங்க காத்திருக்கும் நந்தினியின் வலையில் விழும் கரிகாலன், முதல் பாகத்தின் முடிவின்போது காட்டப்பட்ட இன்னொரு ஐஸ்வர்யா ராயின் தோற்றம், அவரை பார்த்ததும் சுந்தரச்சோழருக்கு ஏற்படும் அதிர்ச்சி ஆகிய காட்சிகளை பார்க்கும்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அப்படியே திரையில் காணும் அனுபவம் ஏற்படுகிறது.

மொத்தத்தில் ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் பிரம்மாண்டம் மட்டுமின்றி த்ரில், சஸ்பென்ஸ், விறுவிறுப்பு ஆகியவற்றுடன் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.