close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2':  ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Friday, April 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடம் அதாவது 164 நிமிடம் என்று தகவல் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என்ற நிலையில் முதல் பாகத்தை விட 3 நிமிடங்கள் இரண்டாம் பாகம் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment