'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம வீடியோ வெளியிட்ட லைகா!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இரண்டாம் பாகத்திற்கு இருமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் உள்பட பலர் இந்த படத்தில் நடித்த பலர் இடம்பெற்றிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


 

More News

'வாரிசு - துணிவு' படங்களை அடுத்து மீண்டும் விஜய்-அஜித் படங்கள் மோதலா?

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் மற்றும் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களின் புரமோஷன்

'மாஸ்டர்' - 'தளபதி 67' படங்களில் உள்ள முக்கிய வித்தியாசம்: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நுழையும் வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் புதிய இணையத்தொடர்;  'ஆர் யா பார்' டிரைலர் ரிலீஸ்

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  'ஆர் யா பார்' இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம்

விஜய்சேதுபதி, நயன்தாரா படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.