'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம வீடியோ வெளியிட்ட லைகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக இரண்டாம் பாகத்திற்கு இருமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் உள்பட பலர் இந்த படத்தில் நடித்த பலர் இடம்பெற்றிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Let’s get those swords in the air as we await the 28th of April 2023!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/YtTAMdGFZm
— Madras Talkies (@MadrasTalkies_) December 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com