close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' இளவயது நந்தினி கேரக்டரில் இந்த குழந்தை நட்சத்திரமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது என்பது தெரிந்ததே. இதனால் சின்ன சின்ன கேரக்டர்கள் நடித்த நட்சத்திரங்கள் யார் என்று தெரியாத அளவுக்கு அவ்வப்போது காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தது.

அந்த வகையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினி கேரக்டரில் மிக அசத்தலாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இளவயது நந்தினி கேரக்டரில் நடித்தது யார் என்பதை ரசிகர்கள் பலர் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது நந்தினியாக பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா அதன் பின்னர் ’சைவம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது நந்தினியாக நடித்த சாரா தற்போது டீன் ஏஜில் உள்ளதை மிகச்சிலர் மட்டுமே கவனித்து அவரது அழகை சமூக வலைத்தளங்களில் வர்ணித்து வருகின்றனர். மிக விரைவில் சாரா, ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment