மீண்டும் இணையும் 'பொன்னியின் செல்வன்' இளஞ்ஜோடி.. இயக்குனராகும் பிரபலத்தின் மகள்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளம் ஜோடிகளாக நடித்த நட்சத்திரங்கள் ஒரு படத்தில் நாயகன், நாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’12பி’ ‘உன்னாலே உன்னாலே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவாவின் மகள் சனா ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரிக்க உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறு வயது ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த சந்தோஷ் என்பவரும் அதே போல் சிறுவயது நந்தினி கேரக்டரில் நடித்த சாரா அர்ஜூன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சாரா அர்ஜுன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் தற்போது ஹீரோயின் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சுந்தர் சி, குஷ்பு தயாரிக்கும் இந்த படத்தில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் மகள் சனா மரியான் இயக்க இருப்பதாகவும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

தியானமும் உண்டு.. டூ பீஸ் குளியலும் உண்டு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா மலேசியாவில் டூ பீஸ் உடையணிந்து  குளிக்கும் புகைப்படத்தையும் குளித்த பின் தியானம் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கொட்டுக்காளி' படத்திற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தாரா சூரி? எந்த நடிகரும் செய்ய மாட்டாங்க..!

சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாக தகவல் வெளியானது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ஸ்பெஷல்.. சுரேஷ் சங்கையா - யோகி பாபு இணையும் படம்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை,

’குக் வித் கோமாளி சீசன் 5’.. வெங்கடேஷ் பட் கூறிய அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில்

2024 குரு பெயர்ச்சி பலன்கள்: யாருக்கு யோகம்? யாருக்கு கஷ்டம்?

பொதுவான பலன்கள்: மங்களகரமான ஆண்டு: வளர்ச்சி, செழிப்பு, புதிய தொடக்கங்கள் சமூக நலத்திட்டங்கள்: அரசாங்கத்தால் அதிக கவனம் கல்வி: கல்வி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் வேளாண்மை: விவசாயிகளுக்கு நல்ல பலன்கள்.