உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்: பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான பொன்னம்பலம் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் பொன்னம்பலம் அவர்களுக்கு செய்யப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்து பொன்னம்பலம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

அண்ணன் சிரஞ்சீவி அவர்களுக்கு வணக்கம்! ரொம்ப நன்றி அண்ணா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் மிகவும் உதவியாக இருந்தது. உயிருள்ளவரை உங்களை மறக்க மாட்டேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆண்டவர் உங்களை எப்போதுமே உங்கள் பெயர் கொண்ட ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக உங்களை வைத்திருப்பார். ஜெய்ஸ்ரீராம், நன்றி’ என்று கூறியுள்ளார். பொன்னம்பலம் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.