கமலின் கண்டிப்புக்குள்ளான மும்தாஜ், பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் கமல் தோன்றுவதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கின்றது. அதிலும் இந்த வாரம் கமல் திடீரென சாட்டையை சுழற்றி மும்தாஜ், மற்றும் பாலாஜியிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டது பார்வையாளர்களுக்கு திருப்தியை கொடுத்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா? என்பது கேள்விக்குறி
மும்தாஜ் மைக்கை கழட்டி வைத்தது விதிமீறல் என்றும், அதற்கு எந்த விளக்கம் கொடுத்தாலும் ஏற்க முடியாது என்று கூறும் கமல், மறு அறிவிப்பு வரும் வரை மைக்கை கழட்டி கார்டனில் உட்காருமாறு மும்தாஜை கூறுகிறார். அதேபோல் நித்யாவை வேண்டும் என்றே கார்னர் செய்த பாலாஜியையும் கண்டிக்கின்றார். நித்யாவுடன் சேர்ந்து வாழ்வது என்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். பிரிவு என்பது என்னுடைய வாழ்க்கையிலும் நடந்துள்ளது. ஆனால் பிரிந்த பின்னர் மரியாதையை பின்பற்ற வேண்டும் என்று பாலாஜிக்கு அறிவுரை கூறுகிறார். கமலின் அறிவுரைக்கு பின்னராவது பாலாஜி திருந்துவாரா? என்பதை பார்ப்போம்.
மேலும் போட்டியில் இருந்து வெளியேற நாமினேஷன் செய்யப்பட்ட மும்தாஜ் , மமதி, பொன்னம்பலம் மற்றும் அனந்து ஆகிய நால்வரில் இருந்து நேற்று பொன்னம்பலம் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்பது அறிவிக்கவுள்ளதாகவும், அதோடு விஸ்வரூபம் 2 பாடலும் இன்று வெளியிடவுள்ளதாகவும் கமல் அறிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments